10 படம் ரிலீஸ்
அஜித்தின் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவராது என அறிவிக்கப்பட்டதை ஒட்டி பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளன. “கேம் சேஞ்சர்”, “வணங்கான்” போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே பொங்கலுக்கு சீட் பிடித்து வைத்துவிட்ட நிலையில் இவை தவிர்த்து 8 திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று வெளிவருகின்றன. மொத்தம் 10 திரைப்படங்கள் இந்த பொங்கல் தினத்தன்று வெளிவர உள்ள நிலையில் இதில் கிரித்திகா உதயநிதி இயக்கிய “காதலிக்க நேரமில்லை” திரைப்படமும் ஜனவரி 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

கண்டிஷன்
“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் திடீரென பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் வெளியாக இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இரண்டு நாட்களில் பின்னணி இசையை முடித்து கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கிறாராம் இயக்குனர் கிரித்திகா உதயநிதி.

ஏ.ஆர். ரஹ்மான் எப்போதும் பின்னணி இசைக்கு 20 நாட்களை எடுத்துக்கொள்வாராம். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானை 2 நாட்களில் பின்னணி இசையை முடித்து கொடுக்கும்படி அழுத்தம் கொடுக்கிறார்களாம்.
“காதலிக்க நேரமில்லை” திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.