ஏ.ஆர்.ரஹ்மான்
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “இழு இழு இழுக்குதடி” பாடல் கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களை துள்ளியாடி வைத்தது.

இப்பாடலில் ஜெயம் ரவியின் நடனம் மிகவும் வசீகரமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான “லேவண்டர் நேரமே” பாடல் வெளிவந்துள்ளது. இப்பாடலை மஷூக் ரஹ்மான் எழுத ஆதித்யா ஆர்கே, அலெக்ஸாண்ட்ரா ஜாய் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலின் லிங்க் இதோ….