கங்குவா தோல்வி:
முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வரும் ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்து படுதோல்வி அடைந்த திரைப்படம் தான் கங்குவா.

ரூ. 300 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ 2000 கோடி வசூலை ஈட்டும் என சூர்யா பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் அது அப்படியே உல்டாவாக மாறிவிட்டது. படுதோல்வி அடைந்ததோடு படத்தை மிகவும் மோசமாக நெட்டிசன்ஸ் விமர்சித்து தள்ளினார்கள் .
கோவில் கோவிலாக தரிசனம்:
இதனால் மிகுந்த சோகத்திற்கும் கவலைக்கும் உள்ளாளான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கடந்த சில நாட்களாக கோவில் கோவிலாக சுற்றி திரிந்து வருகிறார்கள். நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சூர்யாவுடன் ஜோதிகா சென்று அங்கு தரிசனத்தில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது .

அதை அடுத்து சோளிங்கரில் உள்ள யோகா நரசிம்மர் கோவிலுக்குள் சிவா மற்றும் நடிகர் சூர்யா சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள் . இந்த நிலையில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவை தரிசனத்தை நடிகை ஜோதிகா திருப்பதிக்கு தனியாக சென்று சாமி கும்பிட்டு விட்டு வந்திருக்கிறார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
கங்குவா ஹிட் ஆகியிருந்தா போயிருப்பீங்களா?

கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில் சூர்யா ஜோதிகா இருவரும் அடுத்தடுத்து கோவில் கோவிலாக ஆக சென்று தரிசனம் செய்து வரும் விஷயம் சமூக வலைதளவாசிகளிடையே கடும் விமர்சனத்திற்கும் கேலி கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது. இதுவே படம் வெளியாகி ஹிட் ஆகி இருந்தால் இவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருப்பார்களா? என ஜோதிகாவை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.