சிறந்த ஜோடி சூர்யா – ஜோதிகா:
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக பார்க்கப்படுபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
அதையடுத்து தற்போது மீண்டும் நடித்து வருகிறார். இதனிடையே மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். சூர்யாவின் நடிப்பில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் மோசமான விமர்சனத்தை சந்தித்திருக்கிறது .
யார் இந்த அழகான மணப்பெண்:
சூர்யாவுக்கு ஜோதிகா சப்போர்ட் செய்ததால் அவரும் கடுமையாக நெட்டிசன்களால் தாக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா மற்றும் சூர்யா இவர்கள் குடும்பத்தோடு தங்களது உறவுக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் ஜோதிகா சூர்யா, கார்த்தி ரஞ்சனி என ஜோடியாக சென்றிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவை காட்டிலும் இந்த மணப்பெண் ரொம்ப அழகா இருக்காரே யாரா இருக்கும் என்று கேள்வி எழுப்பி இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.