விஜய்-திரிஷா
விஜய்-திரிஷா ஆகியோர் ரசிகர்களின் மனதில் சிறந்த திரை ஜோடியாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. எனினும் கடந்த சில மாதங்களாக விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது சில மாதங்களாகவே விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

தனி விமானத்தில் விஜய்-திரிஷா
கடந்த 12 ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் சினிமாத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் விஜய்யும் திரிஷாவுமே கலந்துகொண்டனர். இருவரும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்றதாக ஒரு வீடியோவும் வெளிவந்தது. இந்த நிலையில் நேற்று “X” தளத்தில் திடீரென #justiceforsangeetha என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
