ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படம் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
முட்டுக்கட்டை போடும் ஜூனியர் என்டிஆர்?
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆரும் ஹிரித்திக் ரோஷனும் ஹிந்தியில் “வார் 2” என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவருகிறது. அதுவும் “கூலி” திரைப்படம் வெளியாகவதாக கூறப்படும் ஆகஸ்து 14 ஆம் தேதி “வார் 2” திரைப்படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் என்பதால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் “கூலி” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு செய்தி வெளிவருகிறது.