நினைவில் வாழும் இயக்குனர்
5 திரைப்படங்களே இயக்கியிருந்தாலும் தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்பட்ட இயக்குனர்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். தனது முதல் திரைப்படமான “இயற்கை” திரைப்படத்திலேயே தேசிய விருதை பெற்றுத்தந்த பெருமைக்குரியவர். “இயற்கை” திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய “ஈ”, “பேராண்மை” போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

2021 ஆம் ஆண்டு “லாபம்” திரைப்படத்தை உருவாக்கிக்கொண்டிருந்த சமயத்தில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு துர்திஷ்டவசமாக உயிரிழ்ந்தார். இவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கே மிகப்பெரிய இழப்பாகும்.
பிரம்மாண்ட கனவு படம்..
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, “ஜனநாதன் சார்க்கு ஒரு பயங்கரமான டிரீம் புராஜெக்ட் ஒன்று இருந்தது. தஞ்சாவூர் கோயிலை எப்படி கட்டினார்கள் என்பது குறித்து ஒரு படம் எடுக்க விரும்பினார். அந்த கோயிலை கட்டிய விதம் குறித்த கதையில் ஒருபக்கம் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இருந்தது” என்று ஜீவா பகிர்ந்துகொண்ட பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.