சரிவை கண்ட நடிகர்
ஜீவா தமிழ் சினிமாவிற்குள் நடிக்க வந்த புதிதில் இளம் கதாநாயகனாக, கோலிவுட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவரது திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. ஆதலால் அவரது கெரியர் சற்று சரிவை கண்டது.

எனினும் அவர் நடித்த “கற்றது தமிழ்”, “ராம்”, “SMS”, “கோ” போன்ற திரைப்படங்கள் காலத்தை தாண்டியும் ரசித்து பார்க்க கூடிய திரைப்படங்களாக அமைந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஜீவா, சீட்டு குலுக்கிப் போட்டு ஹீரோவை தேர்ந்தெடுத்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.
சீட்டு குலுக்கிப் போட்ட தயாரிப்பாளர்
அதாவது “SMS” திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ், “பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம். தனது முதல் படத்தின் ஹீரோவான ஜீவாவையே இத்திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக இருந்ததாம். ஆனால் தயாரிப்பாளரின் சாய்ஸ் ஆர்யாவாக இருந்ததாம்.

இந்த சூழலில் ஜீவா, ஆர்யா ஆகியோரின் பெயர்களை இரண்டு சீட்டில் எழுதி அதனை குலுக்கிப் போட்டார்களாம். அதில் ஆர்யாவின் பெயர் வந்ததால் ஆர்யா “பாஸ் என்கிற பாஸ்கரன்” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தாராம்.