நல்ல நடிகர், ஆனால்?
நடிகர் ஜீவா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான புதிதில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து மிகவும் முக்கியமான நடிகராக உருவானார். ஆனால் சமீப காலமாக அவரது கெரியருக்கு எந்த திரைப்படமும் கைக்கொடுக்கவில்லை. எனினும் தற்போது பா.விஜய் இயக்கத்தில் “அகத்தியா” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரிஸ்க் எடுத்த தயாரிப்பாளர்…
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.32 கோடி என கூறப்படுகிறது. அதாவது ஜீவாவின் “கோ” திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ரூ.20 கோடிக்கு தயாரிக்கப்பட்டது. அத்திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது. அதன் பின் ஜீவாவுக்கான மார்க்கெட் சற்று ஆட்டம் கண்டு வருகிற நிலையில் தற்போது ரூ.32 கோடிக்கு “அகத்தியா” திரைப்படத்தை தயாரித்துள்ளார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ்.