ஜெயலலிதா-என்டிஆர் ஜோடி
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரும் 1971 ஆம் ஆண்டு நடித்து வெளியாகிய திரைப்படம் “ஸ்ரீ கிருஷ்ண விஜயமு”. இத்திரைப்படத்தில் ஜமுனா என்பவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முதல் நாளிலேயே இப்படியா?
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாள் அன்று ஜமுனா படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தபோது அவரை பார்த்து ஜெயலலிதா வணக்கம் சொன்னார். ஆனால் ஜமுனா ஜெயலலிதாவிற்கு பதில் வணக்கம் எதுவும் சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டாராம். இது ஜெயலலிதாவின் மனதை காயப்படுத்தியதாம்.

படப்பிடிப்பில் கண்டபடி திட்டிய ஜெயலலிதா
அதாவது படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ஒரு நாள் ஜெயலலிதா வசனம் பேசியதை பார்த்து, “ஏய், என்ன இந்தளவுக்கு சத்தம் போட்டு பேசுகிறாய்? உன் வாய்ஸை கொஞ்சம் கம்மியா பேசு” என்று ஜமுனா கூறினாராம். அதற்கு ஜெயலலிதா, “இங்க மைக் தலைக்கு மேல் தூரத்துல இருக்கு. நான் சத்தம் போட்டு பேசினால்தான் அது பதிவாகும். அதனால்தான் சத்தம் போட்டு பேசினேன். உன்னால முடிந்தால் என்னை போல் சத்தம் போட்டு பேசு, இல்லை என்றால் உன் இஷ்டம்” என்று கடுங்கோபத்தோடு கத்தினாராம் ஜெயலலிதா.