ஜேசன் சஞ்சய்
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா கலையை பயின்றவர். சினிமா டைரக்சன் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் கடந்த வருடம் “Pull The Trigger” என்ற உலகத் தரமான குறும்படம் ஒன்றை இயக்கினார். அக்குறும்படத்திற்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து லைகா நிறுவனத்திற்காக ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார் ஜேசன் சஞ்சய். இத்திரைப்படத்தில் சந்தீப் கிசான் கதாநாயகனாக நடிக்க எஸ்.தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அஜித்துக்கு கதை சொல்லிய விஜய் மகன்?
இந்த நிலையில் இன்று ஜேசன் சஞ்சயும் அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவும் நேரில் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ஜேசன் சஞ்சய் அஜித்திற்கு ஒரு கதை கூறியிருக்கிறார் என்று செய்திகள் பரவியது.

ஆனால் அதில் உண்மைத்தன்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது ஜேசன் சஞ்சய் தான் இயக்கப்போகும் திரைப்படம் குறித்து பணி நிமித்தமாக சுரேஷ் சந்திராவை சந்தித்தாரே ஒழிய அவர் அஜித்திற்கு கதை கூறவில்லை என செய்திகள் வெளிவந்துள்ளன.