கனவுக்கன்னி
தற்போதைய தலைமுறை இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மகளான இவர், பாலிவுட்டில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் “தேவரா” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ஜான்வி நடிக்கும் வெப் சீரீஸ்…
அதாவது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ஜான்வி கபூர் ஒரு தமிழ் வெப் சீரீஸில் நடிக்க உள்ளாராம். இந்த வெப் சீரீஸை பிரபல இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளாராம். பா.ரஞ்சித் இந்த வெப் சீரீஸை தயாரிக்க உள்ளாராம். விரைவில் இந்த வெப் சீரீஸிற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது.