விஜய்யும் பொங்கலும்
பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர் மாப்பிள்ளை”, “பிரண்ட்ஸ்”, “திருப்பாச்சி”, “போக்கிரி”, “காவலன்”, “நண்பன்”, “மாஸ்டர்”, “வாரிசு” போன்ற திரைப்படங்கள் இதுவரை பொங்கலுக்கு வெளியாகி பந்தயம் அடித்த விஜய் திரைப்படங்களாகும். அந்த வகையில் தற்போது ஜனநாயகன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம்
வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அரசியல் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. “ஜனநாயகன்” திரைப்படமே விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலை பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இத்தகவலை இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமாக KVN Productions அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.