ஜனநாயகன் பொங்கல்
விஜய்யின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” 2026 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் முழு அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் என்பதால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் திரைப்படம் இறங்கவுள்ளதாம்.

பராசக்தி VS ஜனநாயகன்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த வகையில் “பராசக்தி” திரைப்படமும் “ஜனநாயகன்” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மோதவுள்ளன. இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர்கள் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறதாம்.