விஜய்யின் கடைசி திரைப்படம்
விஜய் நடித்து வரும் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்த வருடம் தான் எதிர்கொள்ளவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தங்களில் விஜய் ஈடுபடவுள்ளார். வருகிற ஜூன் மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட்…
ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக்கோ அல்லது சிங்கிளோ வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஜூன் 22 ஆம் தேதி “ஜனநாயகன்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடல் அரசியல் சம்பந்தப்பட்ட பாடலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கி வரும் “ஜனநாயகன்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மமிதா பைஜு, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது.