டைட்டானிக் இயக்குனர்
உலகமே கொண்டாடிய “டைட்டானிக்” படத்தை இயக்கியவர்தான் ஜேம்ஸ் கேம்ரூன். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படங்களில் “அவதார்” திரைப்படம் உலக சினிமா வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இவ்வாறு உலகமே வியந்து பார்க்கும் இயக்குனரான ஜேம்ஸ் கேம்ரூன் மிகவும் மன வருத்தத்தோடு ஒரு முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர்
கடந்த அமெரிக்க தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை குவித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து அதிரடியாக பல சட்டங்களை இயற்றி வருகிறார். குறிப்பாக அமெரிக்க குடியேற்ற சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை கைகளில் விலங்கு மாட்டி இந்தியாவுக்கு அனுப்பினார். இது போன்ற பல சம்பவங்களால் உலகளவில் பேசப்பட்டு வருகிறார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவில் இருந்து வெளியேறப்போகிறேன்…
இந்த நிலையில் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் அமெரிக்காவை நிரந்தரமாக காலி செய்துவிட்டு நியூஸிலாந்துக்குச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். தினமும் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் டிரம்ப்பின் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என கூறியுள்ள அவர், அதனை பார்ப்பதற்கு ஒரு கார் விபத்தை திரும்ப திரும்ப பார்ப்பது போல் உள்ளது” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.