Cow Boy திரைப்படங்கள்…
ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான Genre ஆக Cow Boy திரைப்படங்கள் இருக்கிறது. Cow Boy என்பது வட அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகளை மேய்க்கும் தொழிலை செய்து வரும் நபரை குறிக்கும் சொல் ஆகும். நம் நாட்டை போல் அல்லாமல், வட அமெரிக்க நாடுகளில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் குதிரைகளில் பயணம் செய்துகொண்டே ஆடு மாடு மேய்ப்பார்கள்.

அவர்கள் தலையில் வட்ட வடிவிலான தொப்பியும், உடம்பில் மேற்சட்டையும் காலில் காற்சட்டையும் அணிந்திருப்பார்கள். மிகவும் தனித்துவமாக தெரியும் இவர்களை ஒரு கதாபாத்திரமாக ஆக்கி பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வெளிவந்திருக்கிறது. இத்திரைப்படங்களை Cow Boy திரைப்படங்கள் என்று கூறுவர்.
தென்னிந்தியாவின் Cow Boy…

இந்த நிலையில் 1970களில் தமிழிலும் Cow Boy திரைப்படங்கள் வெளிவந்தன. அத்திரைப்படங்களில் ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்திருந்தார். இதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் Cow Boy கதாநாயகன் என்ற புகழை பெற்றுள்ளார் நடிகர் ஜெய்சங்கர். “காலம் வெல்லும்”, “கங்கா”, “ஜக்கம்மா” ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.