தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்டு
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் தனக்கென தனி பாதையில் பயணித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஜெய்சங்கர். ஒரு காலகட்டத்தில் பல துப்பறியும் திரைப்படங்களில் நடித்து தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்டு என்ற பெயரை பெற்றவர். எனினும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஜெய்சங்கருக்கு ஹீரோ வாய்ப்புகள் குறைய தொடங்கின.

அதனை தொடர்ந்து வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார் ஜெய்சங்கர். இந்த நிலையில் அவர் சினிமாவில் நடிப்பதை தாண்டியும் சொந்தமாக ஒரு தொழில் செய்து வந்தாராம்.
சொந்த பிசினஸ்
அதாவது ஜெய்சங்கர், சொந்தமாக ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையை அக்காலகட்டத்தில் நடத்தி வந்தாராம். அது போக அவர் மிகவும் வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பொருளாதார கஷ்டம் ஏற்பட்டதில்லையாம். அது போக ஜெய்சங்கர் பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு குறுகிய காலமே இருந்தார் எனவும் கூறுகின்றனர்.