சிவகுமார்
1960களில் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்த சிவகுமார், தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக பல ஆண்டுகள் வலம் வந்தார். அக்காலகட்டத்தில் முன்னேறிய பல நடிகர்கள் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சமயத்தில் சிவகுமார் பெரிய நடிகராக உருவான காலகட்டத்தில் கூட மிகவும் சொற்பமான சம்பளத்தையே நிர்ணயித்துக்கொண்டிருந்தார். எனினும் அவரது எளிமையான வாழ்க்கைக்கு அது மிகவும் போனதுமானவையாகவே இருந்தது.

சிவகுமார் சினிமாவுக்குள் நடிக்க வந்த புதிதில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் அமையவில்லை. அந்த காலகட்டத்தில் அவர் ஒரு சைக்கிள் வைத்திருந்தாராம். அவரது சமகாலத்தில் தமிழ் சினிமாவில் இருந்த பல நடிகர்கள் கார்கள் வைத்திருந்த போது சிவகுமாரின் பொருளாதார நிலை சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்குமளவுக்குதான் இருந்ததாம்.
ஜெய்சங்கர் கொடுத்த உத்வேகம்
அந்த காலகட்டத்தில் நடிகர்கள் பலரும் நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள டென்னிஸ் கோர்ட்டில் விளையாட காரில் வருவார்களாம். ஆனால் சிவகுமார் மட்டும் சைக்கிளில் வருவாராம். நம்முடைய பொருளாதார நிலை இப்படியே இருந்துவிடுமோ என்ற வருத்தத்தில் இருந்த சிவகுமாரின் வாடிப்போன முகத்தை ஒரு நாள் பார்த்த நடிகர் ஜெய்சங்கர், “ஏன் சிவா வாட்டமாக இருக்கிறாய்? சினிமாவில் வெற்றி தோல்வி என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. உனக்கு ஒரே ஒரு நல்ல வாய்ப்பு வந்தால் போதும். அதன் பின் உன்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிடும்.

ஆதலால் இதற்கெல்லாம் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காதே” என்று ஆறுதல் கூறினாராம். ஜெய்சங்கர் கூறிய ஆறுதல் தனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாராம் சிவகுமார்.