டாப் நடிகர்
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தபோதே சிவகார்த்திகேயனின் நகைசுவைக்கு பல தரப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அவர் சினிமாவுக்குள் நுழைந்தபோது அந்த ரசிகர் கூட்டம் இரு மடங்கு ஆனது. இன்று ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகளவு ரசிகர்களை கொண்டவர் சிவகார்த்திகேயன் தான்.
மாஸ் ஹிட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “அமரன்” திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இதில் முகுந்த் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தார் சிவகார்த்திகேயன். இத்திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

100 கோடி
சிவகார்த்திகேயன் “அமரன்” திரைப்படத்திற்காக ரூ.75 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. அதே வேளையில் இனி சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் திரைப்படங்களில் ரூ.100 கோடி சம்பளம் கேட்பதாக ஒரு தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் இது குறித்து ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, “சிவகார்த்திகேயன் எந்த தயாரிப்பாளர்களிடமும் ரூ.100 கோடி சம்பளம் கேட்டதாக இதுவரை தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்னால் என்ன சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாரோ அதை விட அதிகமான சம்பளத்தை கேட்கிறார் என்பது உண்மை” என்று கூறியுள்ளார்.