விடுதலை பாகம் 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. திரைக்கதையில் சற்று தொய்வும் டப்பிங்கில் ஒழுங்கமைப்பும் இல்லாமல் இருந்ததாகவும் திரைப்படத்தில் புரட்சிகரமான வசனங்கள் ஓவர்டோஸாக இருந்ததாகவும் ரசிகர்களிடையே விமர்சனங்கள் வெளிவந்தன.

விகடன் மார்க்
இந்த நிலையில் பிரபல வார இதழான ஆனந்த விகடன் “விடுதலை 2” திரைப்படத்திற்கு 100க்கு 50 மதிப்பெண்கள் கொடுத்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், “ஆனந்த விகடனை பொறுத்தவரை எப்போதும் நடுநிலையான விமர்சனங்களையே எழுதுவார்கள். ஆனால் அவர்களின் கருத்துகளோடு ஒத்துப்போகிற சில திரைப்படங்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்குவதை என்ன காரணத்தாலோ வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.