அல்டிமேட் ஸ்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி டாப் நடிகராக வலம் வரும் அஜித்குமார், தனது “அல்டிமேட் ஸ்டார்”, “தல” போன்ற பட்டங்களை துறந்தவர். அதே போல் தனது ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர் அஜித். குறிப்பாக சமீப நாட்களாகவே “கடவுளே அஜித்தே” என்ற கோஷம் வைரலாகி வந்த நிலையில் தன்னை அப்படி அழைத்து கோஷம் போடக்கூடாது என அறிக்கை விட்டவர் அஜித். இவ்வாறு மற்ற நடிகர்களை காட்டிலும் ரசிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் அஜித்குமார்.

அஜித் குடிப்பவரா?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் “அஜித்குமார் மதுப்பழக்கம் அதிகம் உள்ளவரா?” என்ற கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “அஜித்திற்கு மதுப் பழக்கமே இல்லை என்று கூற முடியாது என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிக்கும் வழக்கத்தை கொண்டவர் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.