ஐஸ்வர்யா லட்சுமி:
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி திரைப்பட நடிகையாக திரைத்துறையில் நுழைவதற்கு முன்னதாக மாடல் அழகியாக இருந்தார். நல்ல அழகான வசீகர தோற்றத்துடன் இருந்தவரும் ஐஸ்வர்யா லட்சுமி திரைப்படங்களில் அறிமுகமான புதிதிலேயே மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக மலையாள சினிமாவில் பார்க்கப் பட்டார்.

அதை அடுத்து இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. தமிழ் சினிமாவுக்கு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் .
அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்:
அந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஐஸ்வர்யா லட்சுமி . அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இது தவிர சிம்பு அசோக் செல்வன் த்ரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் . இந்த திரைப்படம் அவருக்கு மீண்டும் மிகப்பெரிய வெற்றியாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணமே வேண்டாம்:
முன்னதாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் அவர்கள் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தீயாக செய்திகள் பரவியது. அதற்கு காரணம் ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டது தான். ஆனால், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எனக்கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் .

இந்த நிலையில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி…எனக்கு 34 வயதாகிறது. ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீண்ட யோசனைக்கு பிறகு தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். 25 வயது வரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் திருமண ஆசையே இப்போது இல்லை.
அர்ஜுன் தாஸுடன் ரகசிய உறவு:
காரணம், திருமணம் ஆன தம்பதிகள் பெரும்பாலும் சந்தோஷமாக இருப்பதே இல்லை. அதை பார்த்து தான் நான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் என ஐஸ்வர்யா லட்சுமி கூறியிருந்தார். முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகர் அர்ஜுன் தாஸிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு… லவ் மேரேஜா? அரேஞ் மேரேஜா என கேட்டதற்கு நோ மேரேஜ் என அர்ஜுன் தாஸ் கூறியிருந்தார். இதை வைத்துப் பார்க்கையில் இவர்கள் இருவருமே திருமணத்தை வெறுத்துவிட்டு லிவிங் லைஸ் போன்று சேர்ந்து வாழ்கிறார்களா? என்ற ஒரு கேள்வியும் எழுந்திருக்கிறது.