திடீர் ரிலீஸ்
கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் கிடந்த “மதகஜராஜா” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளிவர உள்ளது. இதில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மனோபாலா, மயில்சாமி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில் விஜய் ஆண்டனி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிறப்பம்சங்கள்
இந்த நிலையில் “மதகஜராஜா” திரைப்படத்தை குறித்து சில சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம். இத்திரைப்படத்தை இயக்கிய சுந்தர் சி தற்போது ஹீரோவாக வலம் வருகிறார். அதே போல் இத்திரைப்படத்திற்கு இசையமைத்த விஜய் ஆண்டனியும் இப்போது ஹீரோவாகிவிட்டார். மேலும் இத்திரைப்படத்தில் காமெடியனாக நடித்த சந்தானமும் இப்போது ஹீரோ ஆகிவிட்டார்.

கூடுதலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நினைவுகளாக மாறிப்போன மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.