இந்தியன்
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “இந்தியன்”. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “இந்தியன் 2” திரைப்படமும் வெளிவந்தது. ஆனால் “இந்தியன்” திரைப்படம் வெற்றி பெற்ற அளவுக்கு “இந்தியன் 2” வெற்றியடையவில்லை. இந்த நிலையில் “இந்தியன்” திரைப்படத்தை குறித்த ஒரு அரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

டப்பிங்கில் குளறுபடி
“இந்தியன்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காமெடி காட்சியில் கவுண்டமணியை ஒட்டகம் கடித்துவிடும். அப்போது கமல்ஹாசன், “அது கிட்ட ஏன்டா Stomach-அ காட்டுன” என்று ஒரு வசனத்தை கூறுவார். ஆனால் கமல்ஹாசன் பேசிய அந்த வசனம் மட்டும் சரியாக பதிவாகவில்லை. ஆதலால் அந்த ஒரு வசனத்தை மட்டும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை வைத்து டப்பிங் செய்திருக்கிறார்கள். இந்த தகவலை ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துகொண்டுள்ளார்.