சுமாரான படம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “இந்தியன் 2” திரைப்படம், இதன் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக ஷங்கருக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே சில மனஸ்தாபங்கள் எழுந்தது.

“இந்தியன் 3” திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் சில காட்சிகளை படமாக்க இயக்குனர் ஷங்கர் ரூ.65 கோடி கேட்டதாகவும் அதற்கு லைகா நிறுவனம் “இந்தியன் 2 திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் அவ்வளவு தொகை தரமுடியாது” என கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஒரு முடிவுக்கு வந்த படக்குழு
இந்த நிலையில் “இந்தியன் 3” திரைப்படத்தில் இருந்து லைகா நிறுவனம் முழுவதுமாக வெளியேறிவிட்டதாம். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளதாம்.

இத்திரைப்படத்தில் சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில் அப்பாடல் காட்சிகளை படமாக்க வேண்டாம் என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்துவிட்டாராம் ஷங்கர். இதன் மூலம் இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.