பிரபலங்களின் விவாகரத்து:
கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையின ஜோடிகளின் அடுத்தடுத்த விவாகரத்து திரையுலகத்தை அதிரவைத்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா, அமலாபால் ஏ எல் விஜய், ஜிவி பிரகாஷ் சைந்தவி , ஜெயம் ரவி ஆர்த்தி, நாக சைதன்யா சமந்தா உள்ளிட்ட அடுத்த அடுத்த நட்சத்திர பிரபலங்களின் விவாகரத்துகள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது.

திருமணமான புதிதில் பிரபலங்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த இவர்கள் திடீரென விவாகரத்துகளை அறிவித்து பிரிந்து விடுவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அந்த வகையில் தற்போது ஏ ஆர் ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானுவின் விவாகரத்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மனைவியை பிரிந்தார் ஏ.ஆர் ரஹ்மான்:
இது இருவருக்கும் இடையேயான சமரச விவாகரத்தாக அறிவிக்கப்பட்டாலும் இதை அவர்களது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து இப்படி நட்சத்திர பிரபலங்களாக இருந்து வருபவர்களின் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதால் காதல் சீக்கிரம் கசந்து போவது ஏன்? என்ற ஒரு கேள்வி எல்லோரது மனதிலும் தற்போது எழுந்துள்ளது .

இதுகுறித்து நட்சத்திர பிரபலங்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்த வழக்கறிஞர் ஆன வந்தனாஷா கூறியிருப்பதாவது, மிகப்பெரிய பணக்காரர்களாக மிகப்பெரிய பிரபலங்களாக இருந்து வருபவர்கள் ஒரு கட்டத்தில் அவர்களது வாழ்க்கை சலித்து போகும்.
ஒரு நாள் இரவு மட்டும் தான் வாழ்க்கை:
திருமணமான பிரபலங்கள் ஒருநாள் இரவு மட்டுமே பெரும்பாலும் சேர்ந்து வாழ்வார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு வேறு வேலை… அதிகமான பணிச்சுமை…. மற்றவர்களுடன் நட்பு… சோஷியல் உறவு உள்ளிட்ட காரணங்களால் வெவ்வேறு கோணங்களில் பிசியாகி விடுகிறார்கள். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
அந்த நேரத்தில் தான் ஒரு கட்டத்தில் நாம் இருவரும் வாழ்த்து என்ன பிரயோஜனம்? அதைவிட பிரிந்து விடலாமே என்ற ஒரு சலிப்பு இருவருக்குள்ளேயும் ஏற்பட்டு விடுகிறது. இது பெரிய சண்டையாகவோ ஒருவரை ஒருவர் குற்றம் கூறிக்கொண்டோ. பிரிய மாட்டார்கள்.
சலித்துப்போகும் வாழ்க்கை:

இருவரும் பிரிந்து போவோம் என மனப்பூர்வமாக சம்மதித்து தான் பிரிந்து விடுகிறார்கள். இது போன்ற விவாகரத்து பெரும் பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் தொடர்ந்து நடந்து வரும் விஷயம்தான் என ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் வழக்கறிஞரான வந்தனாஷா தெரிவித்துள்ளார்.
எனவே எல்லா கோடீஸ்வரர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை விவாகரத்துக்கு ஒரே காரணம் இருவருக்கும் இடையே ஏற்படும் சலிப்பு தான். அதனால் தான் இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். இதனை செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது