அமரன் திரைப்படம்:
மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது .

கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். மறைந்த மேஜர் முகுந்த் மனைவி கேரக்டரில் சாய் பல்லவி நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
முகுந்த் தந்தை பேட்டி:
இந்த திரைப்படம் மக்களுக்கு நல்லாவே கனெக்ட் ஆகியது. குறிப்பாக மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை தெரிந்த பிறகு மக்கள் பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.இந்த நிலையில் மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தையின் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அமரன் திரைப்படம் வெளிவந்த பிறகு உங்களது மகனின் தியாகத்தை பற்றி மக்கள் பலரும் நினைத்து பெருமைப்படுகிறார்கள். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என கேள்வி அளிப்பதற்கு அமரன் திரைப்படம் வெளிவந்த பிறகு எனக்கு வீட்டை விட்டு வெளியே வரவே மிகவும் பயமாக இருக்கிறது .

அமரன் படத்திற்கு பிறகு பயமா இருக்கு:
காரணம் வெளிய வந்தாவே எல்லோரும் செல்பி எடுக்குறாங்க…எனக்கு யாரென்று தெரியாத நபர் ஒரு 5 நிமிஷம் என்னை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தார் பிறகு ஓடி வந்து என்னிடம் செல்பி எடுத்தார். அந்த அளவுக்கு என்னை செலிப்ரட்டி போல் பார்க்கிறார்கள் மக்கள்.
அது ரொம்ப பயமா இருக்கு. புதுசாவும் இருக்கு என மேஜர் முகுந்த் தந்தை கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாட்டிற்காக மரணித்த மேஜர் முகுந்திற்கு அமரன் திரைப்படம் மூலம் மரியாதை செய்திருக்கிறார்கள் என மக்கள் பலரும் அமரன் படத்தை பாராட்டி வருகிறார்கள்.