லண்டனை அதிரவைத்த இளையராஜா
உலகமே தமிழர்களை நோக்கி திரும்பி பார்க்க வைத்த சம்பவம் ஒன்றை அசாதாரணமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளார் இசைஞானி இளையராஜா. லண்டணின் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவிடன் இணைந்து “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றியுள்ள இளையராஜா மொசார்ட், பீத்தோவன் ஆகியோரின் வரிசையில் இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியில் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனது சிம்பொனியை இசைத்துள்ளார் இளையராஜா. இந்நிகழ்வு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.
அதுவரை காத்திருக்கவும்…
லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல விஷயங்களை பேசினார். அப்போது அவர், “லண்டனை தொடர்ந்து துபாய், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்குச் சென்று சிம்பொனியை அரங்கேற்றவுள்ளேன்” என கூறிய அவர், மேலும் பேசுகையில் “சிம்பொனியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள். இதை சொல்வதால் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். சிம்பொனியை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும். அதுவரை காத்திருக்கவும்” எனவும் இளையராஜா ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.