இசைஞானி
கோலிவுட் இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி கோலோச்சி வருபவர் இளையராஜா. இவரது இசைக்கு எப்படி கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்களோ அது போல இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. எனினும் இளையராஜா, அவரது மகன்களான யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் தவிர்த்து மற்ற எந்த இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியது இல்லை.

என்ன காரணம்?
இந்த நிலையில் இதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இளையராஜா. “எனது குழந்தைகளின் இசையில் பாடும்போது, இந்த டியூனெல்லாம் எனக்கு பாட வராது, வேற மாத்து என கூறுவேன், இல்லப்பா வரும், பாடுங்க என கூறுவார்கள். இது எங்களுக்குள் சாதாரணமாக நடக்கும். ஆனால் மற்ற இசையமைப்பாளர்களிடம் நான் பாடினால் இதெல்லாம் அங்கு பேச முடியாது. கஷ்டமாக இருக்கும். அவர்களை நீங்கள் ஏன் இப்படி ட்யூன் போடுகிறீர்கள் என கேட்க முடியாது. இதுதான் காரணம்” என வெளிப்படையாக பேசியுள்ளார் இளையராஜா.