ஆன்மிக இசைஞானி
இசையில் புரட்சி செய்த இசைஞானி இளையராஜா, ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு உடையவர். ரமண மகரிஷியின் தீவிர பக்தரும் கூட. இவ்வாறு ஆன்மிக நாட்டம் கொண்ட இளையராஜாவிற்கு ஸ்ரீவில்ல்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேர்ந்த ஒரு சம்பவம்தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாளாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் விதமாக இளையராஜா ஆண்டாள் கோவிலில் ஆண்டாளை தரிசிக்க சென்றபோது கருவறைக்கு முன் இருக்கும் அர்த்த மண்டபத்தில் நுழைய பார்த்த இளையராஜாவை அங்குள்ள அர்ச்சகர்கள் வெளியேற்றினர். அதன் பின் அர்த்த மண்டபத்தின் படிகளுக்கு வெளியே நின்றுகொண்டு தரிசித்துவிட்டுச் சென்றார் இளையராஜா. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.