இசைக்கெல்லாம் ராஜா
கோலிவுட் இசை உலகில் தனக்கென ஒரு தனி இசை உலகத்தையே படைத்தவர் இளையராஜா. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை இசை ரசிகர்களை தனது இளமையான இசையின் மூலம் கட்டிப்போட்டவர். இப்போதும் இவரது இசை தற்போதைய தலைமுறையும் ரசிக்கும்படி அமைந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இளையராஜா AI தொழில்நுட்பம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

AI உடன் போட்டி போடுங்கள்…
Artificial Intelligence (AI) என்ற தொழில்நுட்பம் வருங்காலத்தில் உலகத்தையே ஆளப்போகிறது என்று கூறினால் அது மிகையாகாது. புகைப்படம் எடுப்பதில் இருந்து திரைப்படம் உருவாக்குவது வரை பல அபாரமான விஷயங்களை எளிதில் செய்து முடிக்கிறது இந்த தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் இசை அமைப்பிலும் ஊடுருவி வருகிறது. இது குறித்து அப்பேட்டியில் பேசிய இளையராஜா,
“இளைஞர்கள் AI-ஐ பயன்படுத்துவதற்கு பதிலாக AI-யுடன் போட்டியிட வேண்டும். AI இளைஞர்களின் கற்பனை திறனை முடக்குகிறது. நான் AI-யுடன் போட்டியிடப் போகிறேன்” என்று கூறியுள்ளார். இளையராஜா இவ்வாறு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.