இளையராஜா-பாரதிராஜா கூட்டணி
இளையராஜாவும் பாரதிராஜாவும் தங்களது இளம் பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தொடக்கத்தில் பாரதிராஜா இயக்கிய பல திரைப்படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்து வந்தார். அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த “முதல் மரியாதை” திரைப்படத்திற்கு இளையராஜாவே இசையமைத்தார்.

இந்த படம் ஓடாது
“முதல் மரியாதை” திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடித்தவுடன் இளையராஜாவுக்கு அத்திரைப்படத்தை திரையிட்டு காட்டினார் பாரதிராஜா. அத்திரைப்படத்தை பார்த்த இளையராஜாவுக்கு அத்திரைப்படம் வெற்றிபெறும் என்பதில் நம்பிக்கை இல்லையாம். இதனை பாரதிராஜாவிடமும் தெரிவித்துள்ளார். எனினும் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துக்கொடுத்தார் இளையராஜா.

பொய்யான இளையராஜாவின் கணிப்பு
ஆனால் “முதல் மரியாதை” திரைப்படம் வெளிவந்தபோது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாகவும் அது அமைந்தது. இந்த காரணத்தாலோ என்னவோ, இளையராஜா இத்திரைப்படத்திற்கு சம்பளமே வாங்கவில்லையாம்.