பண்ணைபுர ராஜா…
தேனி பண்ணைபுரம் என்ற கிராமத்தில் பிறந்த இளையராஜா தனது சகோதரர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த கூட்டங்களில் வாசித்துக்கொண்டிருந்தார். அதன் பின் சென்னையில் காலடி எடுத்து வைத்த இளையராஜா அதன் பின் இசைஞானியாக வளர்ந்ததெல்லாம் வரலாறு. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இளையராஜா சில விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

எனக்கு யார் இருந்தா?
“இந்தியாவில் உள்ள தலைசிறந்த இசையமைப்பாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்கள். எம்.எஸ்.விஸ்வநாதன், சி.ஆர்.சுப்பராமனிடம் தயாராகி எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் பணிபுரிந்தார். அவர்கள் பயிற்சி பெற்று வந்தார்கள். நான் எங்கே பயிற்சி பெற்றேன். எனக்கு யார் இருந்தார்கள்? என் கிராமத்திலிருந்து இந்த சிம்பெனியை எழுதியிருந்தால் இந்த பேட்டிக்கு வந்திருப்பீர்களா?” என்று இளையராஜா மனம் திறந்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.