இசை புத்தர்
கோலிவுட் ரசிகர்களால் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜா, மூன்று தலைமுறைகள் தாண்டிய ரசிகர்களையும் தனது காந்தர்வ இசையால் மயக்கி வருகிறார். “நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா” என்ற வரிகளுக்கு ஏற்றவாறு தமிழ் இசை உலகை கோலோச்சிக்கொண்டு வருகிறார் இசைஞானி. இசை எனும் போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பயின்றதால் இவரை இசை புத்தர் என்றும் சிலர் அழைப்பது உண்டு.

Live Symphony
இந்த நிலையில் இளையராஜா வருகிற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நகரில் முதல் Live Symphony-ஐ அரங்கேற்ற உள்ளார். இதற்கான தயாரிப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இளையராஜா தனது பிரம்மாண்ட இசைக்குழுவுடன் உரையாடும் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதல் சிம்போனிக்கு Valiant என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ilaiyaraaja Symphony No. 1 – Valiant pic.twitter.com/tDhEyEnOAJ
— Mercuri (@OneMercuri) December 18, 2024