தனுஷின் இயக்குனர் அவதாரம்
இந்திய சினிமாவின் டாப் நடிகராக வலம் வரும் தனுஷ், சமீப மாதங்களாக மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் “ராயன்”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” போன்ற திரைப்படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இத்திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள “இட்லி கடை” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தள்ளிப்போகிறதா இட்லி கடை?
ஏற்கனவே ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் “இட்லி கடை” நிச்சயம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் ஒரு நேயருக்கு பதிலளிக்கையில், “இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகக்கூடிய வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே தெரியவருகிறது” என கூறியுள்ளார். அந்த வகையில் “இட்லி கடை” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவது உறுதி என்று கூறுகின்றனர்.