தனுஷின் இட்லி கடை..
தனுஷ் தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ”இட்லி கடை”. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

அஜித்தால் தள்ளிப்போகும் இட்லி கடை
இந்த நிலையில் அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படமும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளதால் தனுஷின் “இட்லி கடை” திரைப்படம் ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனிடம் சிக்கிய தனுஷ்…
ஆனால் ஆகஸ்து 15 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த “மதராஸி” திரைப்படம் வெளிவர உள்ளதாம். ஆதலால் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் படம் இறங்குமா என்று கேள்வி எழுந்துள்ளதாம். ஆதலால் “இட்லி கடை” கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.