நடிகை சமந்தா:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை சமந்தா தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகை சமந்தா. பிரபல தெலுங்கு நடிகர் ஆன நாக சைதன்யாவை 8 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் கிளாமரான காட்சிகளிலும் ஐட்டம் நடனமும் ஆடி வந்ததார்.
Ex – குறித்து சமந்தா:
குடும்பத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது. விவாகரத்துக்கு பிறகு சமந்தா தொடர்ந்து ஹிந்தி வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்திய பேட்டிகளில் கலந்து கொண்ட போது தனது எக்ஸ் குறித்து சமந்தா வெளிப்படையாக பேசியிருக்கிறார் . நீங்கள் அதிக பணத்தை வீணாக செலவு செய்து ஏன்?எதற்காக? என கேள்வி எழுப்பியதற்கு என்னுடைய EX-காக நான் எக்ஸ்பென்சிவான கிஃப்ட் நிறைய வாங்கிக் கொடுத்தது தான் என்னுடைய வீண் செலவு என சமந்தா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
சமந்தா முன்னதாக நாக சைதன்யாவுக்கு விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் ஹைதராபாத்தில் ஒரு மிகப்பெரிய பங்களா உள்ளிட்டவை வாங்கி பரிசாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.