நடிகர் சிவகார்த்திகேயன்:
நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தனது பணியை செய்து அதன் பிறகு திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களின் நடித்து இன்று நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அமரன் இந்த திரைப்படம் 350 கோடிக்கு மேல் வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் அமரன் படத்தின் சக்ஸஸ்மீட் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
அலறும் சிவகார்த்திகேயன்!
அப்போது இயக்கம் குறித்தும் உதவி இயக்குனராக இருந்தது குறித்தும் பேசிய அவர் நான் முன்பு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக அவருக்கு பணியாற்றி இருந்தேன். சினிமாவில் நடிப்பதை காட்டிலும் இயக்கம் மிகவும் கடினமான ஒன்று என சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதற்கு பொறுமை மிக முக்கியம். அது போன்று தான் ஸ்கிரிப்ட் ரைடிங்கும் ரொம்ப கடினமான விஷயம். அதனால் நான் அந்த பக்கம் எல்லாம் போக மாட்டேன். நடிப்பதே எனக்கு ஓகே என சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.