நல்ல நடிகர்… ஆனால்?
நடிகர் ஜீவா தனது கெரியரின் தொடக்கத்தில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவரது கெரியர் அப்படியே சரிந்தது. சமீப காலமாக அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. ஒரு நல்ல திறமையான நடிகராக இருந்து ஜீவாவின் மார்க்கெட் சற்று தொய்வாக இருப்பது ஓரளவு உண்மை என்றே பல சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் நடித்த திரைப்படத்திற்கு தியேட்டரில் கிடைத்த வரவேற்பை குறித்த ஒரு தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜீவா பகிர்ந்துகொண்டார்.

அமீரின் ராம்…
2005 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த திரைப்படம் “ராம்”. இத்திரைப்படம் சிறந்த நடிப்பிற்கான பெயரை ஜீவாவுக்கு கொடுத்தது. விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் அப்பேட்டியில் கலந்துகொண்ட ஜீவா, இத்திரைப்படத்தை ரசிகர்களோடு ரசிகர்களாக திரையரங்குகளில் கஞ்சா கருப்பு இடம்பெற்ற காட்சிகளுக்குத்தான் விசிலும் கைத்தட்டலும் பறந்தது என கூறியுள்ளார். “நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருக்கிறோமே. நமது நடிப்பிற்கு நிச்சயம் கைத்தட்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் கஞ்சா கருப்புக்குதான் விசில் பறந்தது” என அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.