90’ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி
2002 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை 90’ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் திரிஷா. இப்போது திரிஷாவுக்கு 41 வயது நடைபெற்றுவரும் நிலையிலும் அவர் மிகவும் இளமையாகவே தென்படுகிறார்.

திரிஷா 1999 ஆம் ஆண்டு “ஜோடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து சினிமா ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார் திரிஷா. இவர் முதலில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் “லேசா லேசா”. ஆனால் இத்திரைப்படம் தாமதமாக வெளிவந்தது. அத்திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த “மௌனம் பேசியதே”, “மனசெல்லாம்”, “சாமி” போன்ற திரைப்படங்கள் “லேசா லேசா” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிவந்துவிட்டன.
ஹீரோயின் ஆனது இப்படித்தான்…
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி, திரிஷா “லேசா லேசா” திரைப்படத்தில் கதாநாயகி ஆனது குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “லேசா லேசா” திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டியவர் பாம்பேவைச் சேர்ந்த ஒரு ஹீரோயினாம்.

ஆனால் அவர் கடைசி நிமிடத்தில் வரவில்லையாம். ஆதலால் ஹீரோயினுக்கு தோழிகளாக நடிக்க இருந்த பெண்களில் ஒருவரான திரிஷாவை தேர்ந்தெடுத்து கதாநாயகியாக ஆக்கினார்களாம். இவ்வாறு ஒரே நாளில் திரிஷா கதாநாயகியாகியுள்ளார்.