திரைக்கதை மன்னன்
இயக்குனர் கே.பாக்யராஜ் இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என புகழப்பட்டவர். தான் இயக்கிய பல திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி பாணியிலான திரைக்கதை வடிவத்தை பின்பற்றியவர் பாக்யராஜ். தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பாக்யராஜ் பாலிவுட்டில் இயக்கிய முதல் திரைப்படம் “ஆக்ரி ராஸ்தா”. இத்திரைப்படம் தமிழில் பாக்யராஜ் கதையம்சத்தில் பாரதிராஜா இயக்கிய “கைதியின் டைரி” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இங்கிலிஷில் கதை சொன்ன பாக்யராஜ்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பாக்யராஜ், தனக்கு பாலிவுட்டில் இயக்க வாய்ப்பு கிடைத்ததை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது பாலிவுட்டில் ஒரு படம் இயக்க வாய்ப்பு அமைந்த சமயத்தில்தான் “கைதியின் டைரி” திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்ததாம். இந்த கதை ஹிந்திக்கும் பொருத்தமாக இருக்கும் என பாக்யராஜ் யோசித்த நிலையில், பூர்ணச்சந்திர ராவ் என்ற ஹிந்தி பட தயாரிப்பாளர் மூலம் அமிதாப் பச்சனை சென்னைக்கு அழைத்து வந்தனராம்.

அமிதாப் பச்சனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சைகை எல்லாம் செய்து கதை கூறியுள்ளார். அதனை கேட்டு அமிதாப் பச்சனும் சரி என்று கூறிவிட்டாராம். அவ்வாறுதான் “ஆக்ரி ரஸ்தா” திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு பாக்யராஜ்ஜுக்கு கிடைத்ததாம்.