டிரெண்ட் செட்டர்
தமிழ் இசை உலகில் டிரெண்ட் செட்டராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி, தற்போது தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாது ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஹிப் ஹாப் ஆதி, தனது மன வேதனையை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மதிக்கவே இல்லை…
அதாவது ஹிப் ஹாப் ஆதி, மிகப் பிரபலமான இசையமைப்பாளராக ஆன பின்பும் கூட அவரது பெற்றோர் அவரை தக்காளி வாங்கிவிட்டு வரச்சொல்லுவார்களாம். “நான் வெளியே போனால் கூட்டம் கூடிவிடும்” என்று அவர் கூறினாலும், “உன்னை எல்லாம் யாரு கண்டுக்கப்போறா” என்று கூறுவார்களாம்.

“என்னுடைய பெற்றோர் இருவருமே கல்லூரி பேராசியர்கள், ஆதலால் கண்டிப்பு அதிகமாக இருக்கும். அவர்களின் பார்வையில் நான் மிகப் பெரிய இசையமைப்பாளராக ஆனதை வெற்றிபெற்றதாக அவர்கள் நினைக்கவில்லை. ஒழுக்கத்தைதான் அவர்கள் அளவுக்கோளாக நிர்ணயிக்கிறார்கள்” எனவும் அப்பேட்டியில் கூறியுள்ளார்.