பிரம்மாண்ட இயக்குனர்
தமிழ் சினிமாவை உலகமே திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் என்றால் அது ஷங்கர்தான். அவர் இயக்கிய “எந்திரன்” திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படத்தை இந்தியர்களாலும் உருவாக்க முடியும் என்பதை நிருபித்துக்காட்டியது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது “கேம் சேஞ்சர்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ராம் சரண் நடித்துள்ள இத்திரைப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாடல்களுக்கு மட்டுமே இவ்வளவு கோடியா?
இந்த நிலையில் “கேம் சேஞ்சர்” திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த 5 பாடல்களின் படப்பிடிப்பிற்கு மட்டுமே ரூ.92 கோடிகள் செலவானதாம். மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஹைரானா” என்ற பாடல்தான் இந்திய சினிமாவில் அதிக செலவில் படமாக்கப்பட்ட பாடல் எனவும் கூறப்படுகிறது.
