உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்வு
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியை லண்டனில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் நிகழ்த்தியுள்ளார். பீத்தோவன், மொசார்ட்டின் வரிசையில் இப்போது இளையராஜாவும் இடம்பிடித்துள்ளார். உலக அரங்கில் தமிழ் இனத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. லண்டனில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவை தமிழக அரசு மரியாதையுடன் வரவேற்றது. அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசினார் இளையராஜா.

இனிமேதான் ஆரம்பம்
“ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என்று அழைக்கிறார்கள். நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன்” என இளையராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது பேசியது ரசிகர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.