நயன்தாரா ஆவணப்படம்:
நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் netflix’ல் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியிருக்கிறது. இந்த வெப் தொடரில் நயன்தாரா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் அவர் எப்படி பல சர்ச்சைகளை தாண்டி மீண்டும் சினிமாவில் மீண்டும் வந்தார் என்பது வரை கூறுகிறது.
மேலும் விக்னேஷ் சிவனுடைய காதல் திருமணம் குறித்தும் அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரசியங்களை இந்த ஆவணப்படும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆவணப்படம் வெளியிடுவதில் பெரும் சர்ச்சை, தடங்கல் ஏற்பட்டதாகவும் தனுஷ் மீது நயன்தாரா பகிரங்கமாக புகார் கொடுத்திருந்தார்.
பிரபு குறித்து நயன்தாரா:
இந்த நிலையில் இந்த ஆவண பஃடத்தில் பிரபுதேவா குறித்தும் அவருடைய காதல் தோல்வியை குறித்தும் நயன்தாரா பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அதிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ஸ்ரீ ராம ஜெயம் படத்தில் கடைசி சாட் எடுக்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. எனக்கே தெரியாமல் அப்போது நான் அழுதேன். எனக்கு சினிமா தான் எல்லாமே அப்படிப்பட்ட சினிமாவிலிருந்து விலக முடிவு செய்தது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.
ஆனால் நான் திரைத்துறையில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் அந்த ஒரு நபர்தான் என்னை சினிமாவில் விலக சொன்னதும் அவர்தான். எனக்கு அதில் விருப்பமில்லை எனக்கு வேற ஆப்ஷனும் அவர் கொடுக்கவே இல்லை. ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக்கூடாது என அந்த நபர் கூறிவிட்டார்.
சினிமாவில் விலக காரணம்:
அந்த நபர் மீது இருந்த காதல் நம்பிக்கையால் நான் அவருக்கு வேறு வழியில்லாமல் அதை ஒப்புக்கொண்டேன். வாழ்க்கை என்ன என்பதை புரிந்து கொள்ள அப்போது எனக்கு தெளிவும் இல்லை நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள நாம் ஒரு வேதனையான சூழலில் இருக்க வேண்டும்.
நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தான் இப்படி வெளிப்படையாக பேசியிருக்கிறார் என ரசிகர்கள் இந்த வெப் தொடர் மீதான அதிக ஆர்வத்தை செலுத்தி பார்க்க துவங்கியிருக்கிறார்கள். இருந்தாலும் நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் சினிமா பற்றி பேசும் முதல் பாதி மட்டும் தான் சிறப்பாக இருக்கிறது. காதல் தோல்வி கல்யாணம் உள்ளிட்டவை பார்ப்பதற்கு மிகவும் கிரிஞ் ஆக இருக்கிறது. இரண்டாவது பாதி வேஸ்ட் என ரசிகர்கள் கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது