பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன்
சமீப காலங்களாக ஆயிரம் கோடி வசூலை எப்படியாவது நெருங்கிவிட வேண்டும் என தமிழ் திரையுலக போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த காரணங்களால் சமீப காலமாக தமிழ் சினிமாவின் வியாபாரத்தை பெருக்குவதற்காக இந்திய சினிமாக்களோடும் உலக சினிமாக்களோடு போட்டிப்போட்டு வருகின்றனர் தமிழ் சினிமா இயக்குனர்கள். இதனால் தயாரிப்பாளர்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டுகளில் படம் தயாரிக்க முன்வருகிறார்கள்.
அப்போவே அப்படி
இந்த நிலையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் முதன்முதலாக அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமைந்துள்ளது. அதாவது 1944 ஆம் ஆண்டு வெளியான “ஹரிதாஸ்” என்ற திரைப்படம்தான் அது.

“ஹரிதாஸ்” திரைப்படத்தில் தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் அக்காலத்து சூப்பர் ஸ்டார் என்று அறியப்பட்டவர். இவருடன் டி.ஆர்.ராஜகுமாரி, வசந்தகோகிலம் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1944 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அதன் பின் 3 தீபாவளிகள் இத்திரைப்படம் திரையரங்குகளில் ஓடியது. கிட்டத்தட்ட 700 நாட்கள் என சொல்லலாம். இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் 1 கோடி 90 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பணவீக்கத்தின் படி பார்த்தால் இன்றைய தேதிக்கு 100 கோடி ஆகும்.