ஜிவி பிரகாஷ்:
தெனிந்த சினமாவின் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை பள்ளி பருவத்தில் இருந்ததே காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் .

கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் திருமணமாகி நிறைவடைந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சாய்ந்தவி இருவரும் நாங்கள் பிரிய போகிறோம் எனக் கூறி அதிர வைத்தார்கள். இது அவர்களது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. விவாகரத்துக்குப் பிறகு ஜி வி பிரகாஷ் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மீண்டும் இணையும் ஜோடி:
அதேபோல் சைந்தவியும் பாடல் பாடியும், இசை கச்சேரிகளில் பாடல் பாடியும் நடுவராகவும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரின் வாழ்க்கையும் சுமூகமாக போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் இவர்கள் மீண்டும் இணைய போகிறார்கள் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது வருகிறது டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கும் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரியில் சைந்தவி பாட போவதாக அறிவித்திருக்கிறார். இதிலிருந்து இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் நன்றாக இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. கூடிய விரைவில் இந்த கச்சேரியையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையிலும் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கலாம்.