விடாமுயற்சி
அஜித் குமாரின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் “விடாமுயற்சி” படக்குழுவினரின் அப்டேட்டிற்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்தனர். அந்த வகையில் வருகிற பொங்கல் தினத்தன்று “விடாமுயற்சி” திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குட் பேட் அக்லி

“விடாமுயற்சி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த புராஜெக்டில் இருந்து விலக, இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
மாஸ் அப்டேட்
இந்த நிலையில் X தளத்தில் அஜித் ரசிகர் ஒருவர் ஜிவி பிரகாஷிடம் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இசையமைப்பு குறித்து கேட்க, அதற்கு ஜிவி பிரகாஷ், “ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற Celebration of Life போன்ற ஒரு BGMக்கு Dance Shoot செய்தால் எப்படி இருக்கும்..” என பதிலளித்திருக்கிறார். இதில் இருந்து Celebration of Life போன்ற ஒரு BGMக்கு அஜித்குமார் நடனமாட வாய்ப்புள்ளதாக தெரிய வருவதால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு “குட் பேட் அக்லி” திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.