தனுஷின் புதிய படம்…
“ராயன்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”. இத்திரைப்படத்தில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா காட்டூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷே இத்திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். வருகிற 21 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

கார் வாங்கிக்கொடுப்பீங்களா?
இந்த நிலையில் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நிச்சயம் வெற்றிபெறும். ஜெயிலர் திரைப்படம் வெற்றிபெற்றபோது அத்திரைப்படத்தின் ஹீரோ, இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனியாக அழைத்து பரிசளித்தது போல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் செய்வார் என நம்புகிறேன். அதற்காகத்தான் இன்னும் சம்பளம் கூட வாங்கவிலை” என்று நகைச்சுவையாக கூறியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எனினும் ஜி.வி.பிரகாஷின் இந்த பேச்சு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.